Nirmala periasamy biography of william

நிர்மலா பெரியசாமி

நிர்மலா பெரியசாமி என்பவர் செய்தி வாசிப்பாளராகவும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் இருந்துள்ளார்.

குடும்பம்

[தொகு]

இவர் கரூரில்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தட்சிணாமூர்த்தி என்பவருக்கு மகளாகப் பிறந்தார். இவர் பெரியசாமி என்கிற பி.எஸ்.என்.எல் ஊழியரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விக்னேஷ் ஒரு மகன் உள்ளார்.[1]

தொலைக்காட்சியில்

[தொகு]

இவர் இரண்டு வருடம் ஆசிரியராக பணியாற்றினார். பொதிகை தொலைக்காட்சியில் ஏழு வருடங்கள் செய்தி வாசிப்பாளராக பணியாற்றினார்.[1] பின்பு சன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்தார். ஜி தமிழ் தொலைக்காட்சியில் "சொல்வதெல்லாம் உண்மை" என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணி செய்தார்.[2]

அரசியல்

[தொகு]

இவர் அக்டோபர் 28 ஆம் நாள் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். இவருடன் செய்திவாசிப்பாளர் பாத்திமா பாபுவும் அதிமுகவில் இணைந்தார்.[3] அதிமுக கட்சியின் நட்சத்திரப் பேச்சாரளாக அறியப்படுகிறார். இவர் அதிமுக கட்சியின் செய்தி தொடர்பாளர், தலைமை நட்சத்திரப் பேச்சாளர் போன்ற பல பதவிகள் வகித்தார்.[4]

ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு அதிமுக இரண்டாக பிரிந்த போது, ஓபிஎஸ் அணியில் நிர்மலா பெரியசாமி இருந்தார்.[5][6]

ஆதாரங்கள்

[தொகு]

  1. "'- Nirmala periyasamy slams solvathellam unmai Video receiver show". . 29 December
  2. V, KRISHNAVENI (6 July ). "- Nirmala periyasamy rejects 'bigg boss' offer!". .
  3. Dinamalar (28 October ). "அதிமுக.,வில் இணைந்த பாத்திமா பாபு - நிர்மலா பெரியசாமி!! - Fathima Baboo - Nirmala Periyasamy joints in ADMK". தினமலர் - சினிமா.
  4. "- Nirmala Periyasamy Slams MK Stalin". . 26 February
  5. R, JEYALAKSHMI (21 March ). "#VikatanExclusive - I will join another party, says Nirmala Periyasamy". .
  6. "யார் உண்மையான துரோகி என்பதை ஆர்.கே.நகர் மக்கள் உணர்த்துவார்கள்: நிர்மலா பெரியசாமி". இந்து தமிழ் திசை.